Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லதை மட்டும் செய்யுங்கள்

நல்லதை மட்டும் செய்யுங்கள்

நல்லதை மட்டும் செய்யுங்கள்

நல்லதை மட்டும் செய்யுங்கள்

ADDED : ஏப் 09, 2012 04:04 PM


Google News
Latest Tamil News
* குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம். இல்லாத ஒன்றை இருப்பது போல பெருமை பேசலாம். ஆனால், ஒருநாள் உண்மை வெளிப்படும்போது, அவமானம் உண்டாவதை யாராலும் தடுக்க முடியாது.

* தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடுமே சமுதாயத்தை உருவாக்குகிறது. சமுதாயத்தின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் பலமான நாட்டை உருவாக்குகிறது. அதனால், ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்தை கடைபிடித்து நடக்க வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். ஒவ்வொரு செயலிலும் கடமையுணர்வுடன் ஈடுபடுங்கள். ஆனால், பலனை எதிர்பாராதீர்கள். எல்லாம் கடவுளின் விருப்பம் என்று பலனை அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

இதனைச் சரணாகதி தத்துவம் என்று குறிப்பிடுவர்.

* நாம் ஆசைப்பட்டு தேடும் பணமும், பதவியும் இறந்தபின் நம்மோடு வரப்போவதில்லை. நாம் செய்த பாவபுண்ணியம் என்றென்றும் நம்மை தொடரப் போகிறது. அதனால், நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us